அமெரிக்காவில் காரைத் திருடியவர்களை சாண்டா கிளாஸ் வேடத்தில் சென்று பிடித்த போலீஸ்

0 3352
அமெரிக்காவில் காரைத் திருடிச் சென்றவர்களை சாண்டா கிளாஸ் வேடமணிந்த போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

அமெரிக்காவில் காரைத் திருடிச் சென்றவர்களை சாண்டா கிளாஸ் வேடமணிந்த போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

கலிபோர்னியாவில் உள்ள வணிக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருடன் ஒருவன் லாவகமாக எடுத்துச் சென்றான்.

இதில் அவனது நண்பர் ஒருவருக்கும் பங்கிருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சாண்டா கிளாஸ் வேடமணிந்து துப்பாக்கி முனையில் அவர்களைச் சுற்றி வளைத்தனர்.

அப்போது காரை திருடிச் சென்றவன் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது மற்றொரு சாண்டா கிளாஸ் அதிகாரி பாய்ந்து சென்று அவனை மடக்கிப் பிடித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments