பாகிஸ்தான் சிறையில் வாடும் 319 இந்தியர்கள்.. விவரப் பட்டியலை இந்தியாவிடம் வழங்கியது பாகிஸ்தான்
பாகிஸ்தான் சிறையில் வாடும் 319 இந்தியர்கள் பற்றிய பட்டியலை, அந்த நாடு இந்தியாவிடம் நேற்று ஒப்படைத்தது.
இருதரப்பு ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் பரஸ்பரம் தத்தமது சிறைகளில் வாடும் கைதிகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1ந் தேதி பரிமாறிக்கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது.
அதன்படி பாகிஸ்தான் சிறையில் வாடுகிற 270 மீனவர்கள், 49 குடிமக்கள் என 319 இந்தியர்கள் பற்றிய பட்டியல் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதே போன்று இந்திய சிறைகளில் வாடும் 77 மீனவர்கள், 263 குடிமக்கள் என 340 பாகிஸ்தானியர் பற்றிய பட்டியலை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
Comments