மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்.. மீன்கள், மீன்பிடி உபகரணங்களை அபகரித்து சென்றதாக புகார்..
பக்தர்களுக்கு ஆபாச பட லிங்க் அனுப்பிய 5 ஊழியர்கள் டிஸ்மிஸ்.. தேவஸ்தானத்தின் நடவடிக்கைக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
பக்தர்களுக்கு ஆபாச பட லிங்க் அனுப்பிய 5 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த தேவஸ்தானத்தின் உத்தரவிற்கு தடைவிதிக்க ஆந்திர உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் தொலைக்காட்சியின் ஊழியர்கள் 5 பேர், அலுவலகத்தில் ஆபாச படங்களை பார்த்ததோடு, அதன், லிங்கை பக்தர்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அவர்களை பணிநீக்கம் செய்து தேவஸ்தானம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அந்த ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணையின் போது, தகாத செயலில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Comments