குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியக வளாகம் மீண்டும் திறப்பு
குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியக வளாகம், பொதுமக்கள் பார்வைக்காக வருகிற 5ந் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 13ந் தேதி இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டது.
5ந் தேதி மீண்டும் திறக்கப்பட்டாலும், பார்வையாளர்கள் முன்கூட்டியே பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவருக்கு கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், தலா ஒன்றரை மணி நேரம் கொண்ட 4 பிரிவுகளாக பார்வையாளர் நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் நாட்டின் கலை, கலாசாரம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றை பிரதிபலிக்கும் கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Comments