சீனக் கடல் எல்லையில் அனுமதி மறுக்கப்பட்ட 2 கப்பல்களில் தவிக்கும் 39 இந்திய மாலுமிகளுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தல்

0 1511
சீனக் கடல் எல்லையில் கரை சேர அனுமதி மறுக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த 39 கப்பல் மாலுமிகளுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சீனக் கடல் எல்லையில் கரை சேர அனுமதி மறுக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த 39 கப்பல் மாலுமிகளுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

2 சரக்குக் கப்பல்கள், சீனாவின் ஜிங்டாங், காபீடியான் துறைமுகங்களில் சரக்குகளை இறக்க அனுமதிக்கப்படாமல் பல மாதங்களாக தவித்து வருகின்றன. கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள அந்தக் கப்பல்களில் 39 இந்திய மாலுமிகள்  உள்ளனர்.

இதுதொடர்பாக பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம், சீன அதிகாரிகளை தொடர்புகொண்டு, 2 கப்பல்களும் துறைமுகங்களில் சரக்குகளை இறக்கவும், பணிக்குழு மாற்றத்துக்கும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments