பாகிஸ்தானில் இந்துக் கோவில் இடிப்பு, தீ வைப்புக்கு இந்தியா கண்டனம்
பாகிஸ்தானில் வன்முறையாளர்களால் இந்துக் கோயில் இடிக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி இந்திய அரசு பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கரக் நகரில் இருந்த பழமையான கோவில் இடிக்கப்பட்டது மிகவும் கவலையளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானுக்கு தூதரகம் மூலம் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
சிறுபான்மையான இந்து மக்களுக்கு உரிய பாதுகாப்பும் அவர்களின் கலாச்சார விழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோவிலை மாகாண அரசே புதிதாகக் கட்டித் தருவதாக அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வன்முறையாளர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments