சஞ்சய் ராவத்தின் மனைவி கணக்கில் ரூ.55 லட்சம் பணம் செலுத்திய பெண்ணின் கணவரது ரூ.72 கோடி சொத்துகள் முடக்கம்

0 36043
பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியின் 4 ஆயிரத்து 300 கோடி வாராக் கடன் விவகாரத்தில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவின் கணக்கில் பணம் செலுத்திய பெண்ணின் கணவருக்கு சொந்தமான 72 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

சஞ்சய் ராவத்தின் மனைவியை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 முறை நோட்டீஸ் அனுப்பிய போதும் உடல் நலத்தைக் காரணம் காட்டி அவர் ஜனவரி 5ம் தேதி வரை அவகாசம் கோரியுள்ளார்.

இந்நிலையில் பிரவீன் ராவத் என்பவர் பிஎம்சி வங்கியில் 95 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும் அந்தத் தொகையில் தமது மனைவி மாதுரியின் கணக்கில் 1 கோடியே 95 லட்சம் ரூபாய் செலுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாதுரி வட்டி இல்லாத கடனாக 55 லட்சம் ரூபாய் தொகையை வர்ஷாவின் வங்கிக் கணக்கில் மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments