இதுவரை இல்லாத அளவாக 2020 டிசம்பரில் சரக்கு சேவை வரி வருவாய் 1,15,174 கோடி ரூபாய்..!
இதுவரை இல்லாத அளவாக 2020 டிசம்பர் மாதத்தில் சரக்கு சேவை வரி வருவாயாக ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் நாடு முழுமைக்கும் பொதுவான சரக்கு சேவை வரி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் இதுவரை இல்லாத வகையில் 2020 டிசம்பரில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 174 கோடி ரூபாய் வரி வருவாயாகப் பெறப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தைவிட 12 விழுக்காடு அதிகமாகும். இதற்கு முன் அதிக அளவாக 2019 ஏப்ரல் மாதத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 866 கோடி ரூபாய் வரி வருவாய் பெறப்பட்டது.
கொரோனா சூழலுக்குப் பின் நாட்டின் பொருளாதாரம் வேகமாக மீட்சியடைந்து வருவதையே வரி வருவாய் அதிகரிப்பு காட்டுவதாக அரசு தெரிவித்துள்ளது.
Comments