புத்தாண்டின் முதல் நாளில் உலகில் 3.7 லட்சம் குழந்தைகள் பிறக்கும் - யூனிசெப் கணிப்பு

0 2387
புத்தாண்டின் முதல் நாளில் உலகில் 3.7 லட்சம் குழந்தைகள் பிறக்கும் - யூனிசெப் கணிப்பு

ங்கிலப் புத்தாண்டின் முதல்நாளான இன்று உலகம் முழுவதும் மூன்று லட்சத்து 71 ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் என்றும், இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் என்றும் யூனிசெப் கணித்துள்ளது.

புத்தாண்டின் முதல் குழந்தை பிஜி நாட்டில் பிறந்திருக்கும் என்றும், புத்தாண்டின் முதல் நாளில் கடைசிக் குழந்தை அமெரிக்காவில் பிறக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இன்று பிறக்கும் குழந்தைகளில் மொத்தத்தில் பாதிக்கு மேல் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் பிறக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இன்று இந்தியாவில் 59 ஆயிரத்து 995 குழந்தைகளும், சீனாவில் 35 ஆயிரத்து 615 குழந்தைகளும், பாகிஸ்தானில் 14 ஆயிரம் குழந்தைகளும் பிறக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் மொத்தம் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்றும், அவர்களின் சராசரி வாழ்நாள் 84 வயதாக இருக்கும் என்றும் யூனிசெப் கணித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments