மதுரையில் புத்தாண்டு இரவில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 4 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

0 17918
மதுரையில் புத்தாண்டு இரவில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 4 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

புத்தாண்டு இரவில் மதுரை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 4 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தமிழக அரசு தடை விதித்தது. இதனை கண்காணிக்க மதுரை மாநகர் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இரவு 10 மணிக்கு மேல் வாகனங்களில் சுற்றித்திரிந்த இளைஞர்களை பிடித்து அபராதம் விதித்தனர். அதோடு, மாட்டுத்தாவணி, புதூர், கோரிப்பாளையம், ஆரப்பாளையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பேரிகார்டு அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் என நேற்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 4000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments