பணி விசா தொடர்பான கட்டுப்பாடுகளை மார்ச் மாதம் வரை நீட்டித்து அதிபர் டிரம்ப் உத்தரவு
பணி விசா தொடர்பான கட்டுப்பாடுகளை மார்ச் மாதம் வரை நீட்டித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
எச்1பி உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கான பணி விசாக்கள் வழங்குவதையும், குடிபெயர்வுக்கான கிரீன் கார்டு விண்ணப்பங்களையும் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இரு உத்தரவுகள் மூலம் அதிபர் டிரம்ப் நிர்வாகம் நிறுத்திவைத்தது.
இன்றுடன் இந்த தடையுத்தரவு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வர இருந்த நிலையில், அதை வரும் மார்ச் மாதம் வரை அதிபர் டிரம்ப் நீட்டித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், முன்னர் டிரம்ப் நிர்வாகத்தின் தடையுத்தரவை கடுமையாக விமர்சித்திருந்த போதிலும், அது நீக்கப்படுமா என்பது குறித்து உறுதியளிக்கவில்லை.
பணி விசாக்களுக்கான தடை நீட்டிப்பு, இந்தியாவை சேர்ந்த ஐடி துறை பணியாளர்களுக்கு பாதிப்பாக அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments