கொல்கத்தாவில் தனியார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் அதிரடி சோதனை.. ரூ.178 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியது
கொல்கத்தாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஸ்டீல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தில் அதிரடி சோதனைகளை நடத்தினர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 178 கோடி ரூபாய் கணக்கில் வராத தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதே போல் கிடங்குகளில் வைக்கப்பட்ட சரக்குகளிலும் கணக்கில் இல்லாத 38 கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் சரக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அங்கிருந்த ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பணம், மற்றும் ஒரு கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்புடைய நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Comments