அஸ்ஸாம், மே.வங்கத்தில் காட்சியளித்த புத்தாண்டின் முதல் சூரியோதயம்..
புத்தாண்டின் முதல் சூரிய உதயம் அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலும் மேற்குவங்கம் ஹவுராவிலும் காட்சியளித்தது.
அதிகாலை உதயமான புத்தாண்டின் முதல் சூரியனை வரவேற்று மக்கள் வழிபாடு செய்தனர்.ஹூக்ளி நதிக்கரையிலும் ஹவுரா பாலத்தின் மேலும் காட்சியளித்த புத்தாண்டின் முதல் சூரிய ரேகைகளுக்கு மக்கள் வழிபாடு செய்தனர்.
வாரணாசியில் உள்ள கங்கையாற்றின் படித்துறைகளில் புத்தாண்டை வரவேற்று பக்தர்கள் வழிபாடு செய்தனர். முன்னதாக கங்கை அன்னைக்கு நள்ளிரவு 12 மணிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது.
Comments