சிபிஐ கட்டுபாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்... பிப்ரவரியிலேயே தெரிந்தும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படாதது ஏன்? -விஜய்ராஜ் சுரானா

0 1733

103 கிலோ தங்கம் திருடப்பட்டது கடந்த பிப்ரவரி மாதமே தெரிந்தும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படவில்லை என சுரான நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் விஜயராஜ் சுரானா குற்றம்சாட்டியுள்ளார்.

சிபிஐ  கட்டுபாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக விஜய் ராஜ் சுரானா ஏற்கெனவே சிபிசிஐடி முன் தாமாகவே ஆஜராகி வழக்கின் விவரங்களை கொடுத்திருந்தார்.

இந்நிலையில், சுராணா நிறுவனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை ஏலம் விடுவதற்காக சிபிஐ, சட்ட தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம்,  ஸ்டேட் பேங்க் வங்கி மற்றும் பிற வங்கிகளின் அதிகாரிகள் முன்னிலையில் கடந்த பிப்ரவரி மாதம் லாக்கர்கள் திறக்கப்பட்டு தங்கத்தின் அளவு சரிபார்க்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments