டெல்லிக்குச் செல்வதற்காக தடுப்புகளை உடைத்து அரியானா எல்லைக்குள் நுழைந்த ராஜஸ்தான் விவசாயிகள்
ராஜஸ்தானின் ஷாஜகான்பூரில் டிராக்டரில் வந்த விவசாயிகள் காவல்துறையினரின் தடுப்பரண்களை உடைத்துக்கொண்டு அரியானா எல்லைக்குள் நுழைந்தனர்.
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் இணைந்து கொள்வதற்காக ராஜஸ்தான் விவசாயிகள் டிராக்டர்களில் பேரணியாகச் சென்றனர். அரியானா மாநில எல்லையில் காவல்துறையினர் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த விவசாயிகள் டிராக்டர்களை ஓட்டியபடி தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்குச் செல்வதற்காக அரியானா மாநில எல்லைக்குள் நுழைந்தனர்.
Comments