நாகலாந்து - மணிப்பூர் எல்லையில் சூக்கோ பள்ளத்தாக்கில் காட்டுத்தீ... தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் இந்திய விமானப்படை
மணிப்பூர் - நாகலாந்து மாநிலங்களின் எல்லையில் சூக்கோ பள்ளத்தாக்கில் பற்றி எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த பணியில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது.
மணிப்பூர் - நாகலாந்து எல்லையில் அடர்ந்த காடுகளுடன் கூடிய சூக்கோ பள்ளத்தாக்கு பல்வேறு வகையான விலங்குகளுக்கு வாழிடமாக உள்ளது. இந்தக் காட்டில் மூன்று நாட்களுக்கு முன் திடீரெனப் பற்றிய தீ பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் மரங்களைச் சுட்டுப் பொசுக்கியுள்ளது.
இந்நிலையில் மணிப்பூர் முதலமைச்சர் பிரென் சிங் கேட்டுக்கொண்டதற்கிணங்கத் தீயைக் கட்டுப்படுத்தும் பணிக்காக விமானப்படை ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Comments