அதிமுக முதலமைச்சர் வேட்பாளரைக் கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் - அமைச்சர் ஜெயக்குமார்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணிக் கட்சியினர் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்றுக் கொள்வார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் பள்ளி மாணவர்கள் 738 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக, பாமக, தமாகா கட்சிகள் உள்ளதாகவும், இந்தக் கூட்டணி சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார் என ஜி.கே.மணி கூறியதை அக்கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Comments