புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம்
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர் பினராயி விஜயன், உணவுப் பொருள்களுக்கு பிற மாநிலங்களை கேரளம் நம்பியுள்ள நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடருமானால் அது கேரளாவையும் பாதிக்கும் என்றார்.
புதிய வேளாண் சட்டங்களைப் போன்ற சட்டங்கள் இயற்றப்படும் என காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததாகவும், அத்தகைய சட்டங்களை கொண்டுவர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியும் கடந்த காலங்களில் வலியுறுத்தியிருப்பதாகவும் பாஜக எம்எல்ஏ ஓ.ராஜகோபால் கூறினார்.
ஆனால் தற்போது இந்த இரு கட்சிகள விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாக அவர் குற்றம்சாட்டினார். விவாதத்தின் முடிவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் ஆதரவோடு, மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற அரசின் தீர்மானம் நிறைவேறியது.
Comments