ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 5068 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கையைக் கைவிட வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்றுப் போராட்டத்தைக் கைவிட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஐயாயிரத்து 68 பேருக்குக் குற்றக் குறிப்பாணைகள் வழங்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன் என அனைத்தையும் பாதிக்கச் செய்யும் வகையில் துரோகம் இழைப்பது மாபாதகச் செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Comments