புதுச்சேரியில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு கொண்டாட்டம்... சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
புதுச்சேரியில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி அரசு தடை ஏதும் விதிக்காததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
கடற்கரை, தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுடு ஏரி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அனைத்திலும் புத்தாண்டையொட்டி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Comments