ஏமன் நாட்டின் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலி எனத் தகவல்
ஏமன் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்நாட்டின் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் சவுதி அரேபியாவுக்கு சென்று விட்டு, ஏடன் நகருக்கு விமானத்தில் திரும்பினர்.
விமான நிலையத்தில் அவர்கள் வந்திறங்கிய போது, அவர்களை குறி வைத்து ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. இதில் விமான நிலைய கட்டிடத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் 15 பேர் பலியாகி இருக்கலாம் என்றும் 50 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்காத நிலையில், உள்நாட்டு போரில் ஈடுபட்டு வரும் Houthis பயங்கரவாதிகளே காரணமாக இருக்கலாம் என்று ஏமன் அரசு தெரிவித்துள்ளது.
Comments