இங்கிலாந்தில் இருந்து உத்ரகாண்ட் மாநிலத்திற்கு வந்த 25 பேரை தேடும் பணி தீவிரம்
இங்கிலாந்தில் இருந்து வந்த 25 பேரை தேடும் பணியை உத்ரகாண்ட் மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது.
புதிய வகை கொரோனா பரவலை தடுக்க அந்த மாநிலத்திற்கு இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை 227 பேர் இங்கிலாந்தில் இருந்து வந்தது தெரியவந்தது.
இதில் 202 பேரை அடையாளம் கண்டு பரிசோதனை நடத்தி உள்ளதாகவும், 25 பேரை அடையாளம் காணமுடியவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. அவர்களை தேடும் பணி நடைபெறுவதாகவும் அரசு கூறியுள்ளது.
Comments