புரெவி புயல், மழை பாதிப்புகள் குறித்து மத்தியக்குழு இரண்டாவது நாளாக ஆய்வு
புரெவி புயல் மற்றும் மழை சேத பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினர், இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த 28ஆம் தேதி தமிழகம் வந்த 8 பேர் கொண்ட மத்திய குழுவினர், முதற்கட்டமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாதுறை, கடலூர் மாவட்டங்களில் சேதமடைந்த விவசாய நிலங்களை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து இன்று காலை நாகை மாவட்டம் வருகை தந்த மத்திய குழுவினர், கருங்கண்ணி மற்றும் வடக்கு பனையூரில் சேதமடைந்த நெற்பயிர்கள், தோட்டப் பயிர்களை கொட்டும் மழைக்கு இடையில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, பாமணி, நுணாகாடு, வடசங்கந்தி, உப்பூர், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த மத்திய குழுவினர், அங்கிருந்து தஞ்சை வழியே திருச்சி சென்று டெல்லி புறப்பட்டனர்.
Comments