மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு... ஜனவரி மாதம் 19 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதி

0 1729
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு... ஜனவரி மாதம் 19 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதி

கரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுக்கு பிறகு கடந்த 26-ந் தேதி நடை அடைக்கப்பட்டது.

இந்தநிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சாமி தரிசனத்திற்கு பக்தர்ளுக்கு அனுமதி கிடையாது.

நாளை முதல் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 19-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments