ஆகாஷ் ரக ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய அனுமதி- மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

0 2101
ஆகாஷ் ரக ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய அனுமதி- மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

காஷ் ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில், ஆகாஷ் ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக விரைந்து அனுமதி அளிக்க குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் ஆகாஷ் ஏவுகணை, இந்திய படைகளில் பயன்பாட்டில் உள்ளதில் இருந்து மாறுபட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments