பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கையெழுத்து..!
ஐரோப்பிய ஒன்றியம் - பிரிட்டன் இடையிலான பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் ஓராண்டுக்கு முன்பே வெளியேறிய போதும், இருதரப்பிலும் வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
ஒருவழியாக இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களான உர்சுலா வோன் டெர் லெயன் மற்றும் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்திட வேண்டியிருப்பதால், ஒப்பந்த ஆவணங்கள் பிரிட்டன் அனுப்பி வைக்கப்பட்டன.
ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இது அமலுக்கு வர உள்ள நிலையில், பிரிட்டன் உடனான உறவில் புதிய அத்தியாயம் தொடங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவது அவசியமாகும்.
Comments