அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கனுக்கு மட்டுமே பொங்கல் பரிசு - தமிழக அரசு
அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், அனிதா சுமந்த் அமர்வு, அவசர வழக்காக விசாரித்தது. அப்போது, பொங்கல் பரிசுக்கான அதிகாரபூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பரிசுப்பொருள் மற்றும் பரிசுத்தொகை வழங்க வேண்டுமென ரேசன் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், அரசின் சுற்றிறிக்கையை நாளை மாலை 5 மணிக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
Comments