நேபாள விவகாரத்தில் பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள சீனா.!
நேபாளத்தில், கம்யூனிஸ்ட் கட்சியை காப்பாற்ற, சீனா மேற்கொண்ட, "மிஷன் நேபாள்" பெரும் பின்னடைவை எதிர்கொண்டிருக்கிறது.
நேபாள கம்யூனிச தலைவர்களை ஒன்றிணைக்க சென்ற சீன பிரதிநிதிகள் குழு, மூத்த தலைவர் பிரசாந்தாவையும், பிரச்சினைக்குரியவரான பிரதமர் சர்மா ஒலியையும் சந்தித்தது.
இதில், சீன பிரதிநிதிகள் குழு முன்வைத்த, நாடாளுமன்ற கலைப்பை ரத்து செய்தல், கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய தலைமை என்ற இரு திட்டங்கள் குறித்து சர்மா ஒலி கருத்துத் தெரிவிக்காமலும், பிடி கொடுக்காமலும் இருந்து வருகிறார்.
உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என நேபாள கட்சிகள் எச்சரிக்கை விடுத்ததால், விழிப்பிதுங்கி நின்ற சீன பிரதிநிதிகள், வேறு வழியின்றி, வரும் ஜூலை மாதம் நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க, அனைத்து கட்சியினரையும் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
Comments