இந்தியாவில் மேலும் 24 பேருக்கு வீரியமிக்க கொரோனா உறுதி : உ. பி.யில் மட்டும் 10 பேருக்கு தொற்று

0 5420

ந்தியாவில் மேலும் 24 பேருக்கு மரபணு மாற்ற புதிய  வீரியமிக்க கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இங்கிலாந்தில் இந்த வகை கொரோனா கண்டறியப்பட்டதால், அங்கிருந்து  வந்தோரையும்,  தொடர்பிலிருந்தோரையும் கண்டறிந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று வரை   6 பேருக்கு  வீரியமிக்க கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று  மேலும் 24 பேருக்கு உறுதியாகியுள்ளது.  உத்தர பிரதேசத்தின் மீரட், நொய்டா,காஜியாபாத், பைரேலியில் மட்டும் 10 பேருக்கு உறுதியாகியுள்ளது.

இதனால் உத்தர பிரதேசம் முழுவதும் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்துக்கு இங்கிலாந்தில் இருந்து 1,090 பேர் திரும்பியுள்ள நிலையில்,  565 பேரின் செல் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால், அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments