கொரோனா தடுப்பூசிக்காக ஆன்லைன் மூலம் பதிவு என கூறி நூதன முறையில் மோசடி- சுகாதாரத்துறை இயக்குநரகம் எச்சரிக்கை
கொரோனா தடுப்பூசி போடுவதற்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பணி துவங்கப்பட்டு உள்ளதாக கூறி, நூதன முறையில் பணம் பறிக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு செய்வதாக கூறி ஆதார் எண், மின்னஞ்சல் மற்றும் ஏடிஎம் கார்டு நம்பரைப் பெற்று, அதில் வரும் ஒடிபி எண்ணை தெரிவிக்குமாறு சிலர் கேட்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் மோசடி செய்வதற்காக இது போன்று மர்ம நபர்கள் பேசுவதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Comments