மகனுக்கு குழந்தை வரம் வேண்டி போலி சாமியாரை நாடிய முதிய தம்பதி.. பரிகார பூஜை செய்வதாக நாடகமாடி தம்பதியை வெட்டிவிட்டு நகை, பணம் கொள்ளை

0 7485
மகனுக்கு குழந்தை வரம் வேண்டி போலி சாமியாரை நாடிய முதிய தம்பதி.. பரிகார பூஜை செய்வதாக நாடகமாடி தம்பதியை வெட்டிவிட்டு நகை, பணம் கொள்ளை

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே பரிகார பூஜை செய்வதாகக் கூறி வயதான தம்பதியை அரிவாளால் வெட்டிவிட்டு நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அகரப்பாளையம் புதூரைச் சேர்ந்த ஆறுமுகம் - ஈஸ்வரி தம்பதியின் மகனுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. பேரக் குழந்தை வரம் வேண்டி கோவில், பூஜை, பரிகாரம் என சுற்றி வந்த தம்பதிக்கு வெள்ளக்கோவிலில் ஆட்டோ ஓட்டி வரும் நபர் ஒருவர் மூலம் போலி சாமியார் ஒருவன் அறிமுகமாகி இருக்கிறான்.

குழந்தை வரம் கிடைக்க பரிகார பூஜை செய்வதாகக் கூறி நாடகமாடி, தம்பதி இருவரும் காலில் விழுந்து ஆசி வாங்கும்போது மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரையும் வெட்டிவிட்டு, தம்பதியிடமிருந்து 5 சவரன் நகைகளையும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதில் ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் ஆறுமுகம் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments