அமெரிக்காவிலிருந்து இஸ்ரேல் வந்த முன்னாள் உளவாளி..! நேரில் சென்று வரவேற்றார் பிரதமர் நெதன்யாகு
அமெரிக்காவில் இருந்து இஸ்ரேல் வந்த முன்னாள் உளவாளியை, அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு விமான நிலையத்துக்கு சென்று நேரில் வரவேற்றார்.
டெக்சாசை சேர்ந்த அமெரிக்க கடற்படை முன்னாள் அனாலிஸ்டான ஜோனோதான் பொலார்ட், இஸ்ரேலுக்கு உளவு பார்த்தற்காக கைது செய்யப்பட்டு 1987ம் ஆண்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 30 ஆண்டுகள் சிறையிலிருந்த அவர், பின்னர் பரோலில் வந்தார்.
அவரது பயணத்துக்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, மனைவி எஸ்தருடன் இஸ்ரேலுக்கு தனி விமானத்தில் வந்தார். இஸ்ரேல் வந்ததும் மண்டியிட்டு 2 பேரும் மண்ணில் முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.
அப்போது, அவர்களை நேரில் வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, 2 பேருக்கும் குடியுரிமை அட்டைகளை வழங்கினார்.
Comments