ஆக்ஸ்போர்டு தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை, அவசர மருத்துவத் தேவைக்கு பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்டாசெனகா இணைந்து, கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.
இந்த தடுப்பூசியை, புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு, இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், அவசர மருத்துவத் தேவைக்காக, கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த, அனுமதிக்க கோரி, சீரம் இந்தியா நிறுவனம், மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. சீரம் நிறுவன கோரிக்கை மீது, மத்திய அரசு மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments