சீன பிரதிநிதிகள் வருகை... நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி நடவடிக்கையால் அரசியல் நெருக்கடி!

0 3143

நேபாள நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமர் சர்மா  ஒலிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேபாள நாட்டு  நாடாளுமன்றம் டிசம்பர் 20  ஆம் தேதி  கலைக்கப்பட்டதால் அந்த நாட்டில் அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து 7 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.  ஒலியின் இந்த நடவடிக்கை குறித்தும் நேபாள நாட்டு  உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. ஒலிக்கும்  முன்னாள் பிரதமர் பிரசண்டாவுக்கும்  அதிகார மோதல் இருந்து வந்த நிலையில்,  ஒலியின்  அவசர சட்டத்துக்கு அவரின் சொந்த  கட்சிக்குள்ளேயே ஆதரவு கிடைக்கவில்லை.எனினும், அவர் நாடாளுமன்றத்தை கலைத்தார். இதனால்,  நேபாளில் அடுத்த ஆண்டு  ஏப்ரல் 30 மற்றும் மே 10  ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி   2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கே.பி. சர்மா ஒலி தலைமயிலான "யுனைடெட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்"(United Marxist Leninist ) மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தாஹரல்  பிரசண்டா தலைமையிலான "கம்யூனிஸ்ட் பார்ட்டி மாவோயிஸ்ட் "(Communist Party (Maoist) ) ஆகிய இரு கட்சிகளும் இணைந்து உருவாக்கியது தான் "நேபால் கம்யூனிஸ்ட் கட்சி கட்சிகளின் இணைப்புக்கு சீனா மிகுந்த ஆதரவு தெரிவித்தது. தற்போது ஆளும் கட்சியில் உருவான இந்த  பிளவு, சீனாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஒலி சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும்  அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் சீனாவிலிருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) சர்வதேச துறையின் துணை மந்திரி குவோ யெஜோ(Guo Yezhou ) தலைமையிலான  4  பேர் கொண்ட குழு நான்கு நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை  நேபாளத்துக்கு சென்றது. சீன குழு இரண்டு பரிந்துரைகளை வழங்கியதாக நேபாளம்  தரப்பிலிருந்து கூறப்படுகிறது. 

கலைத்தநாடாளுமன்றத்தை உச்சநீதிமன்ற ஆணை கொண்ட மீண்டும்  நடத்தவும் அதன் மூலம் இரண்டு கட்சிகளும் மீண்டும் இணைந்து ஒலிக்கு மாற்றாக மற்றோரு தலைவரை தேர்ந்தெடுக்கலாம் என்றும் அல்லது நேபாளத்தின் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து ஒரு இடை கால தேர்தல் நடத்தலாம்  பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

சீனா, நேபாள  நாட்டில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி  ஒதுக்கி உள்ளது. மேற்கு சேட்டி அணை West Seti Dam), போகாரா விமான நிலையம் (Pokhara Airport ) மற்றும் மேல் திரிசூலி  நீர் மின் திட்டம்(Upper Trishuli hydropower project) ஆகியவை அவற்றுள் அடக்கம். அதற்கு ஈடாக சீனாவின் "ஒரே  பெல்ட் ஒரே  ரோடு" திட்டத்திற்கு நேபாள ஒத்துழைப்பு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments