அர்ஜெண்டினா மக்களுக்கு ரஷ்ய தயாரிப்பு ஸ்புட்னிக் வீ கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
அர்ஜெண்டினா நாட்டு மக்களுக்கு ரஷ்யா தயாரிப்பு கொரோனா தடுப்பூசி மருந்தான ஸ்புட்னிக்-வீயை (Sputnik V ) போடும் பணி தொடங்கியுள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் சுமார் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 43 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். ஸ்புட்னிக்-வீ மருந்தை தங்களது நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்கு அர்ஜெண்டினா அண்மையில் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து 3 லட்சம் டோஸ் மருந்தை ரஷ்யா கடந்த வாரம் அனுப்பி வைத்தது. அந்த தடுப்பூசி மருந்தை மருத்துவ பணியாளர்கள், பாதுகாப்பு படையினர், ஆசிரியர்கள், முதியோருக்கு முன்னுரிமை கொடுத்து போடும் பணி தொடங்கியுள்ளது.
Comments