கார்த்திக் முதல் கருணாஸ் வரை... துயரத்தை சந்தித்த நடிகர்களின் அரசியல் கட்சிகள்!

0 7265

தமிழ் சினிமாவில் இருந்து ஏராளமானோர் அரசியலுக்குள் நுழைந்துள்ளனர். அதில் , மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். , கருணாநிதி, ஜெயலிதா ஆகியோர் மட்டுமே நேரடி அரசியல் களத்தில் புகுந்து வெற்றி பெற்றவர்கள். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு தமிழக முதல்வராக சிறிது காலம் எம். ஜானகி இருந்தார். தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

தமிழ் சினிமா நடிகர்களில் பெரும்பாலோனோர் அரசியலில் குதித்து தோல்வியையே சந்தித்துள்ளனர். அப்படி, தோல்வியை சந்தித்தவர்களில் நடிகர் சிவாஜி கணேசன் முக்கியமானவர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற பெயரில் 1989- ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் தனிக் கட்சியை தொடங்கினார். தேர்தலில் ஜானகி அணியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க என்ற பெயரில் கட்சியை தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வரை எட்டினார். தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகு அரசியலில் ஓரளவுக்கு வெற்றி பெற்ற நடிகர் என்று விஜயகாந்தை தாராளமாக சொல்லாம். நடிகர் விஜயகாந்துக்கு முன்னதாக தி.மு.கவில் முக்கிய பேச்சாளராக எம்.எல்.ஏ - வாக வலம் வந்த டி.ராஜேந்தர் 1991 ஆம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கட்சி என்ற பெயரில் தனிக் கட்சி கண்டார். பின்னர், 1996 ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க வில் இணைந்தார். 2004- ஆம் ஆண்டு தி.மு.கவில் இருந்து வெளியேறி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியை நடத்தி வந்தார். தற்போது, இந்த கட்சி இருக்கிறதா இல்லையா என்gij அவரிடம்தான் கேட்க வேண்டும். நடிகர் பாக்கியராஜ் எம்.ஜி.ஆர் மீது ஈடுபாடு கொண்டவர் என்பதால்அ.தி.மு.கவில் இருந்தார். பின்னர், எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி சிறிது காலம் நடத்தினார்.

அரசியலில் குதித்து ரொம்பவே காமெடியானது நடிகர் கார்த்திக்தான். தமிழ் சினிமாவில் கார்த்திக் கோலோச்சிய காலத்தில் மென்மையான காதலனாக, ஆக்ரோஷமான இளைஞனாக அன்பான கணவராக பார்க்கப்பட்டவர்  அரசியலுக்குள் நுழைவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த காலக்கட்டத்தில் அரசியல் கருத்துகளும் இவரின் வாயிலிருந்து உதித்ததில்லை. ஆனால், அனைத்திந்திய பார்வார்டு பிளாக்’ கட்சியின் தமிழ்நாடு தலைவராக அதிரடியாக அரசியலுக்குள் நுழைந்தார் கார்த்திக். பின்னர், நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு `மனித உரிமை காக்கும் கட்சி' என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடத்தி வருவதாக தெரிகிறது.நடிகர் சரத்குமார் தி.மு.க.வில் எம்.பியாக இருந்து  அகில இந்திய சமத்துவ கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார்.

கதாநாயக நடிகர்களுக்கு மத்தியில் காமெடி நடிகர் ஒருவர் அரசியலுக்குள் புகுந்து எம்.எல்.ஏவாகவும் உயர்ந்துள்ளார். அவரின் பெயர் கருணாஸ். கடந்த 2001 - ஆம் ஆண்டு நந்தா என்ற படத்தில் லொடுக்கு பாண்டி கேரக்டரில் அறிமுகமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். பிறகு, 2016 - ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து தனக்கு மட்டும் சீட் வாங்கிக் கொண்டார். திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ் தற்போது எம்.எல்.ஏ வாக உள்ளார்.

அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து ரஜினிகாந்த் பின்வாங்கி விட கமல்ஹாசன் மட்டும் களத்தில் இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் செல்வாக்கும் வெளிச்சத்துக்கு வரும் என்று தாராளமாக நம்பலாம். பிற்காலத்தில் ஒருவேளை நடிகர் விஜய் தனிக்கட்சி தொடங்கினால், அவரின் செல்வாக்கையும் பிற்காலத்தில் தமிழக மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments