வா தலைவா... வா தலைவா... அடம்பிடிக்கும் ரசிகர்கள்

0 9914
ரஜினிகாந்தின் நேற்றைய அறிவிப்பு அவரது ட்விட்டர் அட்மின் போட்டதா என சந்தேகம் உள்ளதாகவும் இதனால் நேரடியாக தங்களுக்கு ரஜினி விளக்க வேண்டும் என கோரி ரசிகர்கள் அவரது இல்லத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஜினிகாந்தின் நேற்றைய அறிவிப்பு அவரது ட்விட்டர் அட்மின் போட்டதா என சந்தேகம் உள்ளதாகவும் இதனால் நேரடியாக தங்களுக்கு ரஜினி விளக்க வேண்டும் என கோரி ரசிகர்கள் அவரது இல்லத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தின் முன்பு திரண்ட அவரது ரசிகர்கள், கொடி மற்றும் போஸ்டர்களை கையில் ஏந்தியபடி ரஜினியை அரசியலுக்கு வருமாறு கூறி முழக்கமிட்டனர்.

உயிரே போனாலும் அரசியலுக்கு வருவேன்னு சொன்ன ரஜினிகாந்த், தற்போது அதிலிருந்து பின்வாங்குவதற்கான காரணத்தை தங்களுக்கு விளக்கவேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பீல்டு ஒர்க் செய்து தேர்தலுக்கு தயாராக இருக்கும் நிலையில் ரஜினியின் இந்த திடீர் முடிவு தங்களது வீட்டில் துக்க நிகழ்வு போன்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கண்ணீர்மல்க கூறினர்.

கொடுத்த வாக்கை எப்போதும் காப்பாற்றும் ரஜினி, அரசியலுக்கு வருவதிலும் அதனை செய்து காட்டுவார் என ரசிகர்கள் சிலர் நம்பிக்கையுடன் கூறினர்‍. அப்படி நேரடி அரசியலில் ஈடுபடமால் ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரிப்பதாக ரஜினி வாய்ஸ் கொடுத்தால் அதன்படி செயல்பட மாட்டோம் என அவர்கள் கூறினர்.

காலையில் 10 ரசிகர்கள் மட்டுமே இருந்தநிலையில், பிறகு படிப்படியாக அந்த எண்ணிக்கை 50 ஆக அதிகரித்தது. ரஜினி இல்லம் அமைந்துள்ள ராகவீரா அவென்யூ பகுதிக்கு முட்டைகளை இளைஞர் ஒருவர் எடுத்து வந்தார். ரஜினி கட்சி தொடங்க போவதில்லை என தெரிவித்ததால் அவரது வீடு மீது முட்டைகளை வீச அவர் செல்லலாம் என்று சந்தேகித்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் எந்த வீட்டுக்கு செல்கிறார் என விசாரித்து, அதை உறுதிபடுத்திய பிறகே போலீசார் அனுமதித்தனர்.

பின்னி சாலை அருகே ரசிகர்கள் கூடியுள்ள இடத்தில், அங்கிருந்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுதார். இக்காட்சி அங்கு திரண்டிருந்த பிற ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

அப்பகுதிக்கு வந்த சாமியார் ஒருவர் ரஜினி குறித்து அவதூறாக பேச ஆரம்பித்தார். அப்போது அவருக்கும், ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைக்கண்ட போலீசார், அங்கு வந்து விசாரித்தபோது சாமியாருக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என ரசிகர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சாமியாருடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து போலீசார் போக செய்தனர்.

குடிபோதையில் ரசிகர் ஒருவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை அங்கிருந்த ரசிகர்களும், போலீசாரும் அப்புறப்படுத்தினர். பின்னர் ரசிகர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டம் நடத்த இது இடமில்லை, போராட்டத்திற்கும் கூட்டமாக கூடுவதற்கும் அனுமதியில்லை கலைந்து செல்லுங்கள் என வலியுறுத்தினர். இதையடுத்து ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல தொடங்கியுள்ளனர்.

போயஸ்கார்டனில் இருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கூடி ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட  ரசிகர்களை போலீசார் கைது செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments