குணமடைந்தவர்களுக்கு புதிய வீரியம் மிக்க கொரோனாவால் மீண்டும் பாதிப்பு இல்லை - ஆய்வாளர்கள்
இங்கிலாந்தில் பரவிய புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸால் குணம் அடைந்தவர்களுக்கு இரண்டாவது முறையாக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்றும், உயிரிழப்பு குறித்த பீதியும் தேவையில்லை என்று ஆய்வாளர்கள் நம்பிக்கையளித்துள்ளனர்.
புதிய வகை கொரோனா பாதிப்புடைய பல்வேறு நோயாளிகளை 28 நாள் மருத்துவக் கண்காணிப்பில் வைத்து இங்கிலாந்தின் பப்ளிக் ஹெல்த் என்ற தொண்டு அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.
வீரியம் மிக்க கொரோனா பாதிப்புடையவர்களையும் ஏற்கனவே உள்ள கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களையும் தனித்தனியாக சிகிச்சையளித்து கண்காணித்த போது பெரிய வேறுபாடு தென்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments