இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 7ந் தேதி வரை நீட்டிப்பு

0 2758

பிரிட்டனுடன் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை ஜனவரி 7 வரை இந்தியா நீட்டித்துள்ளது. பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற வீரிய மிக்க கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு விமானங்களை இயக்குவதற்கும், பிரிட்டனில் இருந்து விமானங்கள் இந்தியாவுக்கு வருவதற்கும் டிசம்பர் 23 முதல் 31 வரை தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் பிரிட்டனுடனான விமானப் போக்குவரத்துத் தடையை ஜனவரி 7 வரை நீட்டிக்க முடிவெடுத்துள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments