குரோஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 7 பேர் உயிரிழப்பு
ஐரோப்பிய நாடான குரோஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக 7 பேர் உயிரிழந்தனர். மத்தியப் பகுதியில் உள்ள பெட்ரின்ஜா என்ற நகரை மையமாகக் கொண்டு உள்ளூர் நேரப்படி நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
கட்டட இடிபாடுகளில் சிக்கி சிறுமி உள்பட 7 பேர் உயிரிழந்தனர். தலைநகர் ஸாக்ரெப்பில் ஏற்பட்ட அதிர்வினால் வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் சிக்கிய ஒருவரை தீயணைப்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு மீட்டனர்.
தகவலறிந்து குரேஷிய பிரதமர் ஆன்ட்ரிஜ் லென்கோவிக் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து மீட்புப் பணியில் ராணுவத்தினர் ஈடுபடவும் உத்தரவிட்டார்.
Comments