கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிவசங்கர் ஏழு முறை ஸ்வப்னாவுடன் துபாய்க்கு சென்றதாக சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்
கேரள தங்கக் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கர் இவ்வழக்கில் முதன்மைக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷூடன் ஏழு முறை துபாய் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரியான சிவசங்கர் தொடர்பான விசாரணை நேற்று எர்ணாகுளம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலக நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் சிவசங்கருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்த சுங்கத்துறை அதிகாரிகள் சிவசங்கரும் ஸ்வப்னா சுரேஷூம் தங்கக் கடத்தலுக்காக ஏழு முறை ஒன்றாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதற்கான ஆதாரங்களைத் தாக்கல் செய்தனர்.
இதற்கான பயணச் செலவு முழுவதையும் சிவசங்கரே ஏற்றுக் கொண்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாட்டுக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி இத்தனை முறை பயணம் செய்வது வழக்கத்திற்கு மாறானது என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்
Comments