தமிழகத்தில் புரெவி புயலால் சேதமடைந்த இடங்களை பார்வையிட்டது மத்தியக்குழு
தமிழகத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
மதுரைக்கு வந்த மத்திய குழுவினர் நேற்று பிற்பகல் ராமேசுவரத்திற்கு புறப்பட்டு சென்றனர். தமிழக அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசிய அவர்கள், இன்று காலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், மண்டபம் ஆகிய இடங்களில் புயலினால் பாதிக்கப்பட்ட படகுகளை பார்வையிட்டனர்.
பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை ஆலங்குடிக்கு சென்றுவிட்டு, தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறைக்கு சென்றனர். மயிலாடுதுறை, கொள்ளிடம், ஆகிய இடங்களில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள், குடிசைகளை பார்வையிட்டனர்.
Comments