கொரோனாவிலிருந்து குணமானார் நடிகை ராகுல் ப்ரீத் சிங்
கொரோனாவிலிருந்து குணமாகி விட்டதாக பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகையான அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் தீரன் அதிகாரம்-1, என்ஜிகே உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
கடந்த வாரம் தமக்கு கொரோனா உறுதியானதாகவும், இதனால் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டிருப்பதாகவும் டுவிட்டரில் அவர் பதிவு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் டுவிட்டரில் இன்று ராகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட பதிவில், தனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வந்திருப்பதாகவும், தற்போது உடல்நிலை நன்றாக இருப்பதாய் உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments