'பொழப்ப பாப்போம்!' - ரஜினி அறிவிப்பால் மாறிய ரசிகர்கள்

0 19334

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து பின் வாங்கியதால் அதிர்ச்சியடைந்த ரசிகர் தன் கடையில் ஒட்டப்பட்டிருந்த ரஜினிகாந்தின் பேனரை கிழித்து எறிந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்க முடியாத நிலையில் இருப்பதாக இன்று அறிவித்தார். ரஜினியில் அறிவிப்பு அவரின் ரசிகர்களிடைத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிலர் ரஜினியின் முடிவை இன்னும் நம்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் உள்ளார். அந்த ரசிகரின் பெயர் நாகராஜன். இவர், தக்கலை நீதி மன்றம் எதிரே டீ கடை நடத்தி வருகின்றார்.

கடந்த 12 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தன் வாடிக்கையாளர்களுக்கு அனைவருக்கும் இலவச டீ வழங்கி கொண்டாடினார். இந்த நிலையில், அரசியலில் நுழையவில்லை. கட்சி தொடங்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தால் ஆத்திரமடைந்த நாகராஜன் டிசம்பர் 29 ஆத் தேதியை கறுப்பு தினம் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், தன் கடை முன் ஒட்டப்பட்டிருந்த ரஜினிகாந்த் பேனரையும் அகற்றி தூர வீசி விட்டார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments