பிரிட்டனில் கொரோனா 3வது அலையை தடுக்க வாரந்தோறும் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி- லண்டன் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தகவல்
பிரிட்டனில் கொரோனா 3ஆவது அலை வீசாமல் தடுக்க வாரந்தோறும் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டியது கட்டாயம் என்று ஆய்வு தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
உலகில் முதல்நாடாக பைசர்-பயோ என்டெக் தடுப்பூசியை போடுவதற்கு, இங்கிலாந்து ஒப்புதல் அளித்தது. மேலும் ஜனவரி 4 முதல் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக தடுப்பூசி போடுவதற்கு ஒப்புதல் அளிக்க திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, உருமாற்றம் பெற்ற கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தடுப்பூசி போடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் லண்டன் நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், வாரந்தோறும் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Comments