பிஎம்சி வங்கி மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன்பு ஆஜராகாமல் சிவசேனா சஞ்சய் ராவத் மனைவி தவிர்ப்பு

0 1341
பிஎம்சி வங்கி மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜராகாமல் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்சா ராவத் தவிர்த்துள்ளார்.

பிஎம்சி வங்கி மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜராகாமல் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்சா ராவத் தவிர்த்துள்ளார்.

இந்த வழக்கில் பிரவின் ராவத் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன்  வர்சா பணப்பரிவர்த்தனை மேற்கொண்டிருந்ததை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த 2 முறை சம்மன் அனுப்பியும் உடல்நிலையை காரணம் காட்டி அவர் ஆஜராகாததால் 3ஆவது முறையாக அண்மையில் மீண்டும்  சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

அதில் மும்பையில் உள்ள அலுவலகத்தில் இன்று வர்சா நேரில் ஆஜராக வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் வர்சா விசாரணையில் நேரில் ஆஜராவதை தவிர்த்ததோடு, தனக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments