வேப்பேரி, அயனம்பாக்கத்தில் ரூ.2.20 கோடியில் 2 விடுதி கட்டிடங்களை காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்
பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிருக்காக சென்னை வேப்பேரி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கத்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 விடுதி கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.
ஏற்கெனவே திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் கட்டப்பட்ட விடுதி கட்டிடத்தை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அதையடுத்து தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் தற்போது வேப்பேரி மற்றும் அயனம்பாக்கத்தில் விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
Comments