உதயநிதிக்கு அரசியலில் என்ன அனுபவம் இருக்கிறது - நடிகை குஷ்பூ

0 3874

நடிகர் உதயநிதிக்கு அரசியலில் என்ன அனுபவம் இருக்கிறது என நடிகை குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி மற்றும் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிபெற்று விட முடியும் என உதயநிதி நினைத்து விடக் கூடாது என குஷ்பூ கூறினார் .

தற்போது உதயநிதிக்கு என்ன அனுபவம் இருக்கிறது என்று கேட்கும் குஷ்பு, கடந்த 2010ம் ஆண்டு நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments