போட்டோ கிராபருக்கும் ஆர்டர்... பூனைக்கு நடந்த சீமந்தம்!- விழாவை சிறப்பித்த பப்பிஸ்

0 5203

திருவேற்காட்டில் செல்லமாக நடத்தி வரும் பூனை கர்ப்பமாக இருந்தையடுத்து, ஒரு குடும்பத்தினர் சீமந்தம் நடத்தி அழகு பார்த்துள்ளனர்.

திருவேற்காட்டை சேர்ந்தவர் ஜோதி குமார் என்பவர் தன் வீட்டில் நாய் மற்றும் பூனைகளைப் செல்லமாக வளர்த்து வருகிறார். இந்தநிலையில் , ஜோதிகுமார் வீட்டில் இருந்த பூனை ஒன்று கர்ப்பமடைந்தது .இதையடுத்து, பூனைக்கு சீமந்தம் செய்ய ஜோதிகுமார் குடும்பத்தினர் முடிவு செய்தனர். போட்டோகிராபருக்கும் முதற் கொண்டு ஆர்டர் சொல்லப்பட்டது. பூனை மணப் பெண் போல அலங்காரம் செய்து நெற்றியில் பொட்டு வைத்து அலங்கரிக்கப்பட்ட சேரில் நடு நாயகமாக அமர வைக்கப்பட்டது.

பின்னர் வரிசையாக பழத் தட்டுகள் வைத்தும் ஏழு விதமான உணவுகள் வைத்தும் சடங்குகள் செய்யப்பட்டது. பூனைகள் விரும்பி உண்ணும் நண்டு, மீன், இறால் உள்ளிட்ட அசைவ உணவுகளும் சடங்கில் இடம் பெற்றது. பூனையின் இரு கால்களிலும் வரிசையாக வந்து உறவினர்கள் வளையல்கள் அணிவித்து சீமந்தம் நடத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஜோதி குமார் வீட்டில் வளர்க்கப்பட்ட மற்ற செல்லப்பிராணிகளான நாய்களும் பங்கேற்று விருந்தில் வைக்கப்பட்டிருந்த நண்டு, இறால், மீன்களை ஒரு பிடி பிடித்தன. போட்டோ கிராபர் விழா நிகழ்ச்சிகளை ஒன்று கூட விடாமல் புகைப்படமாக பதிவு செய்தார். விழா முடிவில் தங்கள் வீட்டில் வளர்ந்த அனைத்து செல்லப்பிராணிகளுடனும் ஜோதிகுமார் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தன் குழந்தைகள் போல வளர்த்து வரும் செல்லப்பிராணிக்கு சீமந்தம் நடத்தியது மகிழ்ச்சியை அளிப்பதாக ஜோதிகுமார் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பூனைக்கு சீமந்தம் நடத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments