ஆரோவில் பகுதியில் வெளிநாட்டு பறவைகள் மர்மான முறையில் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சர்வதேச ஆரோவில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரோவில் பகுதியில் அதிகளவிலான வெளிநாட்டு பறவைகள் வாழ்ந்து வரும் நிலையில், அவ்வபோது சமூக விரோதிகளால் பறவைகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன.
இதேபோல் அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிளி வகையை சேர்ந்த வெளிநாட்டு பறவைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இறைச்சிக்காக நரிக்குறவர்கள் விஷம் கலந்த தானியங்களை வைத்து பறவைகளை கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
Comments